கலை, கலாசாரம்
உயர் மின்னழுத்த தூணில் மோதி வேன் விபத்து ! 7 பேர் காயம் !

யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று இன்று (21) அதிகாலை விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்து பேராதனை மற்றும் கண்டி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிரிமத்தலாவ நகருக்கு அண்மித்த பகுதியில் இன்று (21) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கண்டி திசையிலிருந்து கொழும்பு திசை நோக்கி பயணித்த இந்த வேன் உயர் மின்னழுத்த தூணில் மோதி விபத்துக்குள்ளானது.
யாத்திரை சென்று திரும்பிய எரவ்வல பகுதியை சேர்ந்தவர்களே விபத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடுகன்னாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
, உயர் மின்னழுத்த தூணில் மோதி வேன் விபத்து ! 7 பேர் காயம் !









