கலை, கலாசாரம்

குடிபோதையில் வீதியில் வலம் வந்த நபரால் 4 வாகனங்கள் மற்றும் மாகாண சபை கட்டிடம் சேதம் !

வாள் ஒன்றுடன் வீதிக்கு வந்த நபர் ஒருவர் வீதியில் பயணித்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று தலங்கம பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

தலங்கம பிரதேசத்தின் டென்சில் கொப்பேகடுவ மாவத்தையில் நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் குடிபோதையில் இருந்ததாகவும், அவரது தாக்குதல்களால் 4 வாகனங்களும் மாகாண சபை கட்டிடமும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

, குடிபோதையில் வீதியில் வலம் வந்த நபரால் 4 வாகனங்கள் மற்றும் மாகாண சபை கட்டிடம் சேதம் !

Back to top button