கலை, கலாசாரம்
கருங்கற்களுடன் கால்வாயில் கவிழ்ந்த டிப்பர் !

பாதுக்கை மீபேயில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு கருங்கற்களை ஏற்றிச் சென்ற டிப்பர் ரக வாகனம் ஒன்று ஹங்வெல்ல எம்புலுகம சந்திக்கு அருகில் இன்று (06) விபத்துக்குள்ளானது.
குறித்த டிப்பர் ரக வாகனம் பாலத்தின் பாதுகாப்பு வேலியை உடைத்து களனி கங்கையின் கிளை கால்வாய்க்கு அருகில் கவிழ்ந்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது
இந்த விபத்தில் டிப்பர் ரக வாகனத்தின் சாரதிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
, கருங்கற்களுடன் கால்வாயில் கவிழ்ந்த டிப்பர் !









