கலை, கலாசாரம்

வவுனியாவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட யாழ் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

[ad_1]

வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்றையதினம் (29-08-2024) உயிரிழந்துள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் வவுனியா, கற்பகபுரம்  பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (27-08-2024) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தனது நண்பர்களுடன் மது விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட இளம் குடும்பஸ்தர் மீது அங்கு வந்த குழுவொன்று கூரிய ஆயுதத்தால் தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து காயமடைந்த இளைஞன் வவுனியா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் வவுனியா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதன்போது, சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் யாழ்ப்பாணம், சில்லாலை பகுதியைச் சேர்ந்த 36 வயதான குடும்பஸ்தர் என தெரிவிக்க்படுகிறது.

வவுனியா வைத்தியசாலையில் சடலத்தை பார்வையிட்ட மாவட்ட நீதிபதி, இது தொடர்பான வாக்குமூலங்களையும் பெற்றிருந்தார்.

சம்பவம் தொடர்பில் பூவரசன்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

[ad_2]
Lankafire

Back to top button