கலை, கலாசாரம்

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட தாய், மகள் கைது !

கண்டி பிரதேசத்தில் பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வனப் பகுதியொன்றில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட தாய் மற்றும் மகள் கடந்த 17 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

48 வயதுடைய தாயாரும் 26 வயதுடைய மகளுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 1,250 லீற்றர் கோடா ,200 லீற்றர் கசிப்பு , சமையல் எரிவாயு மற்றும் சமையல் எரிவாயு அடுப்பு உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, சந்தேக நபர்களுடன் இணைந்து கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டதாக கூறப்படும் மேலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

, கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட தாய், மகள் கைது !

Back to top button