கலை, கலாசாரம்

ஜனாதிபதித் தேர்தல் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் நடத்தப்படும் : நிமல் லான்சா !

அரசியலமைப்பின் படி ஜனாதிபதித் தேர்தல் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் நடத்தப்படும் எனவும், அதனை ஒத்திவைக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்தார்.

நிமல் லான்சா ஊடகங்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்து இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். அரசியலமைப்பின் பிரகாரம் ஜனநாயகத்தை பாதுகாக்க ஜனாதிபதி தேர்தல் குறித்த கால எல்லைக்குள் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார், அதுவே அரசாங்கத்தின் நிலைப்பாடாகவும் உள்ளது. ஜனாதிபதித் தேர்தலையோ அல்லது பாராளுமன்றத் தேர்தலையோ இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைப்பதற்கான யோசனைகளை பல்வேறு தரப்பினர் சமர்ப்பிக்கலாம். அல்லது அது தொடர்பான எந்தவொரு கருத்தையும் சமர்ப்பிக்கலாம். இது அவர்களின் தனிப்பட்ட கருத்தே அன்றி அரசாங்கத்தின் நிலைப்பாடல்ல. அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் நடத்துவது தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்பாகும் எனவும் நிமல் லான்சா அந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

, ஜனாதிபதித் தேர்தல் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் நடத்தப்படும் : நிமல் லான்சா !

Back to top button