கலை, கலாசாரம்

ஈழத்தமிழர்களுக்காக குரல்கொடுத்த வெள்ளையன் மரணம்; தமிழீழ தேசியகொடி வைத்து அஞ்சலி

[ad_1]

தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்காக குரல்கொடுத்த தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை தலைவர் த.வெள்ளையன் காலமானார்.

இந்நிலையில் அவரது மறைவுக்கு தமிழீழ தேசியகொடி வைத்து அஞ்சலி ம்செலுத்தப்பட்டுள்ளது.

ஈழ மக்கள் மீது பெரும் பற்றுக்கொண்ட அவரது மறைவுக்கு பல்வேறு தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள வியாபாரிகள் மட்டுமல்லாது அரசியல் வட்டாரத்திலும் நன்கு பரிச்சயமான ஒரு பெயர் த. வெள்ளையன். தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவையின் தலைவரான வெள்ளையன், உதிரிகளாக சிதறிக் கிடந்த தமிழக வியாபாரிகளை ஒருங்கிணைத்து, ஒரு அமைப்பாக மாற்றியதில் முக்கியப் பங்கு வகித்தவர்.

வணிகர் நலனுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த வெள்ளையன், பல அரசியல் கட்சி தலைவர்களுடன் இணக்கமான நட்பும் கொண்டிருந்தவர்.

இந்நிலையில் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 76 வயதான வெள்ளையன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 76 வயதான வெள்ளையன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காலமாகியுள்ளார்.

முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் குறிப்பில், வணிகர் பெருமக்களின் நலனுக்காக உழைத்தவர் வெள்ளையன் என புகழாரம் சூட்டியுள்ளார். வெள்ளையனின் குடும்பத்தினர் உள்ளிட்டவர்களுக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், வணிகர்களின் நலனுக்காக அல்லும் பகலும் பாடுபட்டவர் வெள்ளையன் என குறிப்பிட்டுள்ளார். வெள்ளையனின் குடும்பத்தினருக்கு இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

பொதுப் பிரச்சினைகளுக்காகவும், வணிகர்கள் ஒற்றுமை மற்றும் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் வெள்ளையன் என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

வெள்ளையன் சிறந்த தமிழ் உணர்வாளர் என புகழாரம் சூட்டிய விசிக தலைவர் திருமாவளவன், தமிழீழ விடுதலையில் வெள்ளையன் தீவிரமான பற்று கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மாநிலம் முழுவதும் வணிகர்களை ஒருங்கிணைக்க வெள்ளையன் கடுமையாக உழைத்ததாக, வணிகர் சங்கப் பேரவை கூட்டமைப்புத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.

 

[ad_2]
Lankafire

Back to top button