கலை, கலாசாரம்

இலஞ்சம் வாங்கிய பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது !

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை ஆணைக்குழுவினால் மஹாபாகே பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2 காசோலைகள் தொடர்பாக வத்தளை, பள்ளியாவத்தை பகுதியைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டிற்கு அமைய, விசாரணைகளை முன்னெடுத்து சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் இருக்க 25,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (03) மாலை வெலிசர பொருளாதார மத்திய நிலையத்துக்கு செல்லும் வழியில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் குறித்த பொலிஸ் பரிசோதகரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

, இலஞ்சம் வாங்கிய பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது !

Back to top button