சனத் நிஷாந்த மரணம் விபத்து அல்ல கொலை – கிளம்பிய புதிய சர்ச்சை.!

சனத் நிஷாந்த மரணம் விபத்து அல்ல கொலை – கிளம்பிய புதிய சர்ச்சை.! கட்டுநாயக்க நெடுஞ்சாலை விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் தொடர்பில் பாரிய சந்தேகங்கள் எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
அவர் இயற்கையாக நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தாரா அல்லது திட்டமிட்டு கொல்லப்பட்டாரா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்த சனத் நிஷாந்த தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி கட்சியை சேர்ந்தவர்கள் மிகவும் மோசமான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதனால்தான் இந்த சந்தேகம் அதிகமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மரணத்தில் சந்தேகம்
சனத் நிஷாந்தவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அவரது இல்லத்திற்கு சென்ற போது ஊடகங்களின் முன்னிலையில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சனத் நிஷாந்தவின் மரணத்தை தென்னிலங்கை மக்கள் வரவேற்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சில இடங்களில் பால் சோறு வழங்கி கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








