கலை, கலாசாரம்

ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு !

கிந்திகொட பிரதேசத்திலுள்ள ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சீதுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (28) சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 45 முதல் 50 வயதுக்கு இடைப்பட்ட 5 அடி 10 அங்குல உயரம் கொண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபர் மஞ்சள் மற்றும் கருப்பு நிறத்திலான சாரத்துடன், பச்சை நிற டி-செர்ட் அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

, ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு !

Back to top button