இலங்கை செய்திகள்

அதிர வைக்கும் அநுரவின் வெற்றி – விருப்பு வாக்கிலும் கொழும்பில் முன்னிலை

அதிர வைக்கும் அநுரவின் வெற்றி – விருப்பு வாக்கிலும் கொழும்பில் முன்னிலை

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் தற்போது நடைபெற்று முடிந்தது. அதையடுத்து வாக்கு எண்ணும் பணியும் ஆரம்பமாகியது.

அதில் 50 சதவீத வாக்குகளை பெற முடியாததால், விருப்பு வாக்கினை எண்ணும் பணி ஆரம்பிக்கப்பட்டது.

அதன்படி, நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் கொழும்பு மாவட்டத்திற்கான கடுவெல தொகுதியின் விருப்பு வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

அநுரவின் வெற்றி

இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 84,299 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 30,670 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 26,538 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 3,095 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

Back to top button