அண்ணா ஒவ்வொருவராக அனுப்புகிறோம். நாங்கள் வரும் வரை பார்த்துக் கொள்ளுங்கள் ! மாகந்துரே மதூஷின் மயானத்தில் வைக்கப்பட்ட பதாகை

படுகொலை செய்யப்பட்ட கிளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் இறுதிக் கிரியைகள் அவரது குடும்ப உறுப்பினர்களின் பங்கேற்புடன் இன்று (13) பொரளை பொது மயானத்தில் இடம்பெற்றது.
இதன்போது, மாகந்துரே மதுஷின் சடலம் புதைக்கப்பட்ட கொடிகமுவ பொது மயானத்திற்கு முன்பாக அவரது புகைப்படத்துடன் கூடிய பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது
அதில், “அண்ணா ஒவ்வொருவராக அனுப்புகிறோம். நாங்கள் வரும் வரை பார்த்துக் கொள்ளுங்கள்” என்று எழுதப்பட்டிருந்தது.
இதேவேளை, வசந்தவின் பூர்வீக கிராமமாக இருந்த நுவரெலியா நகரமும் வெள்ளைக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்ததாக செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
கடந்த 8ஆம் திகதி அத்துருகிரிய பிரதேசத்தில் பச்சை குத்தும் நிலையமொன்றை திறக்கச் சென்ற கிளப் வசந்த எனப்படும் சுரேந்திர வசந்த பெரேரா உட்பட இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் கிளப் வசந்தவின் சடலம் ஜயரத்ன மலர்சாலையில் அடக்கம் செய்யப்பட்டதையடுத்து, உறவினர்கள் இன்று பிற்பகல் பொரளை பொது மயானத்தில் இறுதிக்கிரியைகளை மேற்கொண்டனர்.
அவரது இறுதி அஞ்சலிக்காக நெருங்கிய உறவினர்கள் குழுவொன்று வந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
, அண்ணா ஒவ்வொருவராக அனுப்புகிறோம். நாங்கள் வரும் வரை பார்த்துக் கொள்ளுங்கள் ! மாகந்துரே மதூஷின் மயானத்தில் வைக்கப்பட்ட பதாகை









