இலங்கை செய்திகள்
கல்வித்தகைமையை நிரூபிக்க நேரம் தேவை..! நலிந்த தெரிவிப்பு…
கல்வித்தகைமையை நிரூபிக்க நேரம் தேவை..! நலிந்த தெரிவிப்பு...

கல்வித்தகைமையை நிரூபிக்க அஷோக ரன்வல காலம் எடுத்துக்கொண்டுள்ளார்.இன்னும் சிறிது காலத்தில் அவர் தனது கல்வித்தகைமையை நிரூபிப்பாரென அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.
இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லவே மக்கள் ஆணை வழங்கப்பட்டது. மாறுபட்ட அரசியல் கொண்டுவருவதற்காகவே இந்த ஆணை வழங்கப்பட்டது.
அதனால் தான் சபாநாயகர் தனது இராஜினாமாவை கையளித்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு தனது கல்வித்தகைமையை காட்ட முடியாத பட்சத்தில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதைவிட பெரிய விடயங்கள் நாட்டில் நடந்துள்ளது.ஆனால் இது மாதிரியான அரசியல் கலாச்சாரம் இதற்கு முதல் இருக்கவில்லை என அவர் கூறினார்.








