கலை, கலாசாரம்

அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் மழைவீழ்ச்சியில் சிறிதளவு அதிகரிப்பு !

நாளை (26) முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழைவீழ்ச்சியில் சிறிதளவு அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

அதேநேரம், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது 50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது 30-40 கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

, அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் மழைவீழ்ச்சியில் சிறிதளவு அதிகரிப்பு !

Back to top button