சர்வதேச செய்திகள்

இடிமின்னல் மழை! – 20 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

Thunderstorms! - Warning for 20 districts!

நாளை, ஜூலை 12, சனிக்கிழமை, நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் இடி மின்னல் தாக்குதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Alpes-de-Haute-Provence, Ariège, Aude, Aveyron, Cantal, Haute-Garonne, Gard, Gers, Hérault, Landes, Lozère, Lot, Lot-et-Garonne, Pyrénées-Atlantiques, Hautes-Alpes, Haute-Loire, Hautes-Pyrénées, Pyrénées-Orientales, Tarn மற்றும் Tarn-et-Garonne ஆகிய 20 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் பலத்த இடி மின்னல் தாக்குதல்கள் பதிவாகக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், Aude, Hérault, Gard மற்றும் Pyrénées-Orientales ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கு குறித்து கூடுதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் பயணங்களைத் தவிர்க்கவும், பாதுகாப்பான இடங்களில் தங்கவும், வானிலை மாற்றங்களை உன்னிப்பாகக் கவனிக்கவும் வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலதிக விவரங்களுக்கு, உள்ளூர் வானிலை அறிக்கைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Back to top button