இலங்கை செய்திகள்

இலங்கை பாராளுமன்றத்துக்குள் அமளி : செங்கோலுக்கு பாதுகாப்பு.!

இலங்கை பாராளுமன்றத்துக்குள் அமளி : செங்கோலுக்கு பாதுகாப்பு.! பாராளுமன்றத்தில் தற்போது பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

சபைக்கு நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்துக்கு திருத்தங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. எதிர்கட்சியினால் இதுவரையிலும்  கொண்டுவரப்பட்ட இரண்டு திருத்தங்களையும் ஏற்க ஆளும் கட்சி மறுத்துவிட்டது.

இந்நிலையில், ஒழுங்குப் பிர​ச்சினை எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், தயாசிறி ஜயசேகர, சந்திம வீரக்கொடி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை கவனத்தில் கொள்ளாது திருத்தங்கள் செய்யப்படுகின்றன. இது சட்டவிரோதமானது என்றும் எதிர்க்கட்சியின் குற்றஞ்சாட்டினர்.

அத்துடன் சபைக்குள் நடுவை இறங்கிவிட்டனர். ஆளும் கட்சியினரும் சபையின் ஓரத்திலுள்ள ஆசனங்களுக்கு முன்பாக குவிந்து நிற்கின்றனர். இதனால் இருதரப்பினரும் காரசாரமாக கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், படைகல சேவிதர்கள் மற்றும் உதவியாளர்கள் செங்கோலுக்கு அருகில் நின்று, செங்கோலுக்கு பாதுகாப்பு வழங்கிக்கொண்டிருக்கின்றனர்.

இலங்கை பாராளுமன்றத்துக்குள் அமளி

முந்திய செய்தி…

பாராளுமன்றத்தில், செவ்வாய்க்கிழமை (23), புதன்கிழமை (24) நடைபெற்ற நிகழ்நிலை காப்புச் சட்ட மூலம் மீதான விவாதத்தின் பின்னர், புதன்கிழமை (24) மாலை வாக்கெடுப்புக்கு விடுக்கப்பட்டது.

சட்டமூலத்தை வாக்கெடுப்புக்கு விடுமாறு, எதிர்க்கட்சி பிரதம கொறடாவான ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கோரிநின்றார்.

அதன்பின்னர் வாக்கழைப்பு மணி ஒலிக்கப்பட்டது. சபைக்கு ​வெளியே இருந்த எம்.பிக்கள்,சபைக்குள் பிரவேசித்தனர் பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், சட்டமூலத்துக்கு 108 ஆதரவாக வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அதனடிப்படையில், 46 மேலதிக வாக்குகளால் நிகழ்நிலை காப்புச் சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button