அம்பிளாந்துறை பாதை படகுச்சேவையில் பயணிப்பவர்களின் அசமந்தப்போக்கு

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அம்பிளாந்துறை கிராமத்தையும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் கிராமத்தையும் இணைக்கும் பிரதான போக்குவரத்து மார்க்கமாக காணப்படும் பாதைப் படகுச்சேவையானது தற்போது சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறிப்பாக கடந்த 03 ஆண்டுகளுக்கு முன்னர் திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பகுதியில் இடம்பெற்ற பாதைப்படகு விபத்தின் பின்னர் பாதுகாப்பான பயணத்திற்கென ஒதுக்கப்பட்ட பாதுகாப்பு மேலங்கியினை தற்போது மக்கள் எவரும் அணியாத நிலையில் காணப்படுகிறது.

பாதையில் பயணிக்கும் பயணிகளிடம் பாதுகாப்பு மேலங்கி அணிந்து பயணிக்குமாறு பாதை ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்ற போதும் அவர்கள் அதை பொருட்படுத்தாமல் இருப்பதாக சொல்லப்படுகிறது .

இதனால் பாதுகாப்பான பயணத்திக்கு தங்களால் உத்தரவாதம் வழங்க முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளதை பாதை ஓட்டிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர் .
எதிர்வரும் காலங்களில் மேலங்கி அணியாமல் எந்த ஒரு பயணியையும் பாதையில் பயணிக்க அனுமதிக்க போவதில்லை என்றும் , மீறுவோருக்கு எதிராக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் ,கிராம உத்தியோகத்தரிடமும் முறையிட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது







