சர்வதேச செய்திகள்இலங்கை செய்திகள்

HMPV வைரஸ் பரவல் சீனாவில்: அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

HMPV வைரஸ் பரவல் சீனாவில்: அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

சீனாவில்  பரவி வரும் வைரஸ் காய்ச்சலால் அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும், குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் இதுபோன்ற வைரஸ்கள் பரவுவது இயல்பானது என்றும் சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருப்பினும், பல நாடுகள் சீனாவுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு தங்கள் நாட்டு மக்களுக்கு தற்போது அறிவித்துள்ளன.

HMPV வைரஸ் பரவல் சீனாவில்: அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

இந்நிலையில், சீனாவுக்குச் செல்லும் சீன நாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டினரின் ஆரோக்கியத்திற்கு உத்தரவாதம் அளிக்க முடியும் என்றும், சீனாவுக்கு பயணம் செய்வது ஆபத்து இல்லை என்றும் சீன அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

மனித மெட்டா நியூமோவைரஸ் (HMPV) என்ற வைரஸ் சீனாவில் பரவி வருகிறது.இதன் அறிகுறிகளாக இருமல், காய்ச்சல், மூக்கடைப்பு மற்றும் மூச்சுத் திணறல் போன்றன இருக்கும்.

இந்த நோய் முதன்முதலில் 2001 இல் கண்டறியப்பட்டதுடன், இதைத் தடுக்க எந்த தடுப்பூசியும் உருவாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Back to top button