கலை, கலாசாரம்

உறுமய காணி உறுதி திட்டம் சீர்குலைப்பதற்கு சிலர் முயற்சி : ஜனாதிபதி !

‘உறுமய’ நிரந்தர காணி உறுதித் திட்டத்துக்காக அரச அதிகாரிகள் பலர் அர்ப்பணிப்புடன் செயற்படும் அதேவேளை, சிலர் அதனை சீர்குலைக்க முயல்வதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இவ்வாறான அதிகாரிகள் தொடர்பான தகவல்களை தமது பிரதேசத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குமாறு மக்களிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார். அந்தத் தகவல்களை தனக்குப் பெற்றுத் தருமாறு பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் ஜனாதிபதி கோரினார்.

தமக்குரிய காணி உறுதியைப் பெற்றுக்கொள்ளும் உரிமையைப் பறிக்க எவருக்கும் இடமளிக்க முடியாதென வலியுறுத்திய ஜனாதிபதி, இந்த வேலைத் திட்டம் வெற்றியடைவதற்கு சகல பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவையும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமின்றி எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

, உறுமய காணி உறுதி திட்டம் சீர்குலைப்பதற்கு சிலர் முயற்சி : ஜனாதிபதி !

Back to top button