கலை, கலாசாரம்

CCTV மூலம் அடையாளம் காணப்பட்ட 4,500 சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை !

கொழும்பு நகரில் CCTV அமைப்பின் ஊடாக அடையாளம் காணப்பட்ட போக்குவரத்து விதிகளை மீறிய 4500க்கும் அதிகமான சாரதிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் துஷார கம்லத் தெரிவித்தார்.

போக்குவரத்து திணைக்களத்தின் சிசிடிவி கமெராக்களில் பதிவாகியுள்ள காணொளி ஆதாரங்கள், உரிய குற்றங்களுக்காக சாரதிகளுக்கு அபராதம் விதிக்க பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் பொருத்தப்பட்டுள்ள 106 சிசிடிவி கமராக்களில் பொரளை, நாரஹேன்பிட்டி உள்ளிட்ட 33 பிரதான சந்திகளில் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளை அடையாளம் காணும் நோக்கில் பொலிஸ் விசேட வேலைத்திட்டமொன்றை பெப்ரவரி முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, பாதை விதிகளை மீறுதல், வீதி குறியீடுகளை மதிக்காமை, தடை செய்யப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துதல், சிக்னல் சிக்னல்களில் சிவப்பு விளக்குகள் இன்றி வாகனம் செலுத்துதல் போன்ற போக்குவரத்து சட்ட மீறல்கள் சிசிடிவி கமெரா மூலம் அவதானிக்கப்படுவதாக துஷார கம்லத் தெரிவித்தார்.

பொரளை சந்தியில் அதிகளவு போக்குவரத்து விதிமீறல்கள் பதிவாகுவதாகவும், போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளில் பெரும்பாலானோர் முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் பஸ் சாரதிகளே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்தின் சமத்துவம், துல்லியம் மற்றும் வெளிப்படைத் தன்மையை அனைவருக்கும் காண்பிக்கும் வகையில், சிசிடிவி அமைப்பை மேம்படுத்த பொலிஸ் துறை வருவதாக துஷார கம்லத் மேலும் தெரிவித்துள்ளார்.

, CCTV மூலம் அடையாளம் காணப்பட்ட 4,500 சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை !

Back to top button