கலை, கலாசாரம்

யாழில் தீயில் எரிந்த இளம் குடும்பப் பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

[ad_1]

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தீயில் எரிந்த நிலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்றையதினம் (27-08-2024) உயிரழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய குடும்ப பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த குடும்ப பெண் கடந்த 25ஆம் திகதி தீயில் எரிந்த நிலையில் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

அதேவேளை, குறித்த பெண்ணுக்கு அவரது கணவனே தீ வைத்ததாக உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இருப்பினும் கணவன் குறித்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இந்நிலையில் சடலத்தை புதைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

[ad_2]
Lankafire

Back to top button