கலை, கலாசாரம்
மட்.வெல்லாவெளியில் இடம்பெற்ற குருதிக்கொடை நிகழ்வு.!!

மட்.வெல்லாவெளியில் இடம்பெற்ற குருதிக்கொடை நிகழ்வு.!! இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 76 வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் முகமாக பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன் அவர்களின் வழிகாட்டலில் குருதிக்கொடை நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு வெல்லாவெளி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் அனுசரணையில் “உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் போரதீவுப்பற்று பிரதேச செயலகம் முன்னெடுத்த குருதிக்கொடை முகாம் ஒன்று போரதீவுப்பற்று பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் நேற்றைய தினம் 5ம திகதி இடம்பெற்றது.

இக்குருதிக்கொடை முகாமில் மட்டக்களப்பு பிராந்திய இரத்த வங்கி வைத்திய அதிகாரி, இரத்த வங்கி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்ததுடன் இளைஞர் யுவதிகள், பொது மக்கள் மற்றும் போரதீவுப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தமை குறிப்பிடத்தக்கது.





