கலை, கலாசாரம்
ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இருவர் கைது

ஆட்டுப்பட்டி தெரு – ஜிந்துபிட்டி பிரதேசத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரும் ஆதரவாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடவத்தை மற்றும் ஆட்டுப்பட்டி தெருவைச் சேர்ந்த 28 மற்றும் 39 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆட்டுப்பட்டி தெரு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.








