கலை, கலாசாரம்

ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம் ​தொடர்ந்திருப்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பு : நஸீர் அஹமட் !

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம் ​தொடர்ந்திருப்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பு என்றும் அவரது தலைமைத்துவத்திலேயே, பொருளாதார மீள் எழுச்சியை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் எனவும் வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

இலங்கையின் அந்நியச்செலாவணி கையிருப்பில் புலம்பெயர் தொழிலாளர்களின் பங்களிப்பை பாராட்டும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் விகமணிக ஹரசற எனும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (21) குருநாகல் சத்தியவாடி மைதானத்தில் நடைபெற்றது.

நிகழ்வின் அதிதிகளில் ஒருவராக கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்:

நாடு கடந்த காலத்தில் எதிர்கொண்ட பாரிய பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்வதில் ஜனாதிபதியின் திறமையே முக்கிய பங்களித்தது.

நாட்டின் பொருளாதாரம் 2022 ஆம் ஆண்டில் பாரிய நெருக்கடியை எதிர்கொண்டது. அரசாங்கத்தின் தலைவரான ஜனாதிபதியே பதவி விலகும் நிலை ஏற்பட்டது.

அத்தியாவசியப்பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டது. இவ்வாறான நிலையில் நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கான அந்நிய செலாவணியை ஈட்டிக்கொள்வதில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது நம்பிக்கை வைத்தார்.

அவரின் நம்பிக்கை வீண்போகவில்லை. இன்று இலங்கைக்கு அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் முக்கிய துறையாக புலம்பெயர் தொழிலாளர்களைக் குறிப்பிடலாம்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளைத் திறமையாக சமாளித்தது போன்றே , எதிர்காலத்தில் அவ்வாறான ஒரு நிலை ஏற்படுவதைத் தடுக்கும் வகையிலும் மிக முக்கியமான நடவடிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்துள்ளார்.

அவர் ஆரம்பித்துள்ள இந்த நடவடிக்கைகளை தொடர்ந்தும் வெற்றிகரமாக முன்னெடுக்க அவரது தலைமைத்துவத்தினால் மட்டுமே முடியும்.

அந்த வகையில் எதிர்வரும் காலத்திலும் அவரது தலைமைத்துவம் தொடர்ந்திருப்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

, ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம் ​தொடர்ந்திருப்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பு : நஸீர் அஹமட் !

Back to top button