கலை, கலாசாரம்

யாழில் 22 வயது யுவதி விபரீத முடிவு

[ad_1]

யாழ்ப்பாணத்தில் இளம் யுவதி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ். கொட்டடி பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் யதுசாயினி என்ற 22 வயது யுவதியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் வெளியே சென்றிருந்த நிலையில் மேற்படி யுவதி நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் தனியாக வீட்டில் இருந்துள்ளார். வெளியே சென்றவர்கள் வீடு திரும்பிய வேளை அந்த யுவதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.

உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காகச் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

[ad_2]
Lankafire

Back to top button