கலை, கலாசாரம்

60 வயது பெண் மீது பாலியல் துஷ்பிரயோகம் : விசாரிக்கச் சென்றவர் மீது தாக்குதல்!!

தனது 60 வயது சகோதரியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக கூறப்படும் சந்தேக நபரிடம் விசாரிக்கச் சென்ற சகோதரியை தடியால் தாக்கி காயப்படுத்திய வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 65 வயதுடைய நபராவார்.

இவர் கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி 60 வயது பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் இது தொடர்பில் வெளிப்படுத்தாத பட்சத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது சகோதரியிடம் தெரிவித்துள்ளார்.

60 வயது பெண் மீது பாலியல் துஷ்பிரயோகம்

இந்நிலையில் இது தொடர்பில் சந்தேக நபரிடம் விசாரிக்கச் சென்ற சகோதரியை குறித்த நபர் தடியால் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட சகோதரி பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு இது தொடர்பில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட 60 வயதுடைய பெண் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Back to top button