கலை, கலாசாரம்

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ‘பேக்கரி ஜனா’ கைது!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ‘பேக்கரி ஜனா’ கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘மேர்வின் ஜனா’அல்லது ‘பேக்கரி ஜனா’ என அழைக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொரலஸ்கமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெஹிவளை வீதி, தெவலமுல்ல சந்தி பகுதியில் 26 ஆம் திகதி சனிக்கிழமையன்று விசேட  அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ‘பேக்கரி ஜனா’ கைது!

இதன்போது,  காரில் பயணித்த பேக்கரி ஜனா 17 கிராம் 60 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சந்தேகநபர் 45 வயதுடைய தெஹிவளை, அத்திட்டிய பகுதியைச் சேர்ந்தவராவார்.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக பொரலஸ்கமுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Back to top button