24 மணி நேரத்தில் 1,403 பேர் கைது !

யுக்திய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் இரண்டாம் கட்ட நடவடிக்கையின் போது 24 மணித்தியாலங்களுக்குள் ஆயிரத்து 403 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 57 பேர் மேலதிக விசாரணைகளுக்காகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கைதானவர்களில் ஆயிரத்து 340 ஆண்களும் 63 பெண்களும் அடங்குகின்றனர்.
அதேவேளை இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது ஆயிரத்து 86 கிலோ கிராம் ஹெரோயின், 782 கிராம் ஐஸ் ரக போதைப்பொருள் மற்றும் 3 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் என்பவற்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன், சட்டவிரோத சொத்துக்களை வைத்திருந்தமை தொடர்பில் மேலும் 17 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், 24 சந்தேக நபர்கள் புனர்வாழ்விற்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
, 24 மணி நேரத்தில் 1,403 பேர் கைது !









