கலை, கலாசாரம்

தங்க நகை கொள்ளையன் மாட்டினான்..! யாழில் சம்பவம்…

தங்க நகை கொள்ளையன் மாட்டினான்..! யாழில் சம்பவம்...

தங்க நகை கொள்ளையன் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த கைது நடவடிக்கையின்போது பெருமளவு நகைகள், ஆவணங்கள், திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள், கைக்குண்டு என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

தங்க, நகை, கொள்ளையன், மாட்டினான்

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம், கோப்பாய், மானிப்பாய், சுன்னாகம் பொலிஸ் பிரிவுகளில் கடந்த இரண்டு வருடங்களாக, முகத்தை மறைத்தவாறு துவிச்சக்கரவண்டியில் சென்று நூதனமாக நகைகளை திருடும் குற்றச்செயல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றன.

இந்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த புங்குடுதீவைச் சேர்ந்த பிரதான சந்தேக நபர் கொழும்பில் தலைமறைவாக இருந்தபோது  யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கடந்த வியாழக்கிழமை (05) கைதுசெய்யப்பட்டார்.

இதன்போது சந்தேக நபரின் மனைவி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடமிருந்து தங்க நகைகளும் மீட்கப்பட்ட நிலையில், திருடிய நகைகளை விற்ற பணத்தில் அந்த நபர் கொழும்பில் சொகுசு வீடொன்றை அமைத்தமையும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருடப்பட்ட நகைகளை சந்தேக நபரிடமிருந்து வாங்கிய கொழும்பைச் சேர்ந்த மேலும் மூன்று பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

Back to top button