கலை, கலாசாரம்
		
	
	
யாழ் பல்கலைக்கழத்தில் ம்ாணவர்கள் வாய்க்கு கறுப்புத்துணி கட்டி ஆர்ப்பாட்டம்!

[ad_1]
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழகத்திற்கு முன்னால், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி ஆர்ப்பாட்டமொன்று இன்று (30) மதியம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளை ஏந்தி, வாய்களை கருப்பு துணியால் கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தலைவர் துவாரகன், பல்கலைக்கழக ஒன்றியத்தின் செயலாளர் சிந்துஜன், கலைப்பீட மாணவர் ஒன்றியம் தலைவர் நெவில்குமார், விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் விதுசன், விரிவுரையாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், ஊழியர் சங்கத்தினர் மற்றும் மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
 
  
  
 
[ad_2]
Lankafire
 
				







