கலை, கலாசாரம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளர் ஒருவர் படுகொலை!

[ad_1]

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்டத்தில் ஹினிதும தேர்தல் தொகுதியின் பிரதான அமைப்பாளராக கடமையாற்றிய நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி – ஹினிதும தொகுதியின் பிரதான அமைப்பாளராக இருந்த சம்பத் கமகே, என்பது தெரியவந்துள்ளது.

பலியானவர் இன்று (17) பனாகொட, சமகி மாவத்தையில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது, ​​முச்சக்கரவண்டியில் வந்த நபரொருவர் அவரது தலையில் பொல்லினால் தாக்கியுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்தனர்.

பலத்த காயங்களுடன் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.

கொலையை செய்த சந்தேக நபர் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

[ad_2]
Lankafire

Back to top button