கலை, கலாசாரம்

வேன் – பஸ் மோதி விபத்தில் தேரர்கள் உட்பட 12 பேர் காயம்

[ad_1]

பிபில – மஹியங்கனை வீதியில் ஹேபொல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் தேரர்கள் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளதாக பிபில பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (15) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

மஹியங்கனையிலிருந்து பிபில நோக்கிப் பயணித்த வேன் ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது, வேனின் சாரதியும் பின்புறத்தில் அமர்ந்திருந்த 11 தேரர்களும் காயமடைந்துள்ள நிலையில் பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வேன் சாரதி உறங்கியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பிபில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

[ad_2]
Lankafire

Back to top button