வேட்பு மனு பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட ஹரீஸுக்கு தேசியப்பட்டியல்
அம்பாறையில் ஹக்கீமுக்கு வலுக்கும் எதிர்ப்பு !

வேட்பு மனு பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட ஹரீஸுக்கு தேசியப்பட்டியல்
அம்பாறையில் ஹக்கீமுக்கு வலுக்கும் எதிர்ப்பு !
அம்பாறை மாவட்டத்தில் எமது கட்சி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் வேண்டுகோளுகிணங்கவே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸின் பெயர் வேட்பு மனு பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் கண்டியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் தெரிவித்தார்
அம்பாறை மாவட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரிஸ் உள்வாங்கப்படவில்லை என்பதற்காக தேவையற்ற விஷமத்தனமான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவது கவலைக்குரியது
என்னால் எடுக்கக்கூடிய உச்சக்கட்ட முயற்சியை நான் எடுத்த நிலையிலும் ஏனைய வேட்பாளர்கள் விட்டுக்கொடுப்பு செய்யாத காரணத்தினாலும்
இறுதி நேரத்தில் ஹரிஸ் அவர்களின் பெயர் வேட்பாளர் பட்டியலில் உள்வாங்கப்படுவதில் தடங்கல் ஏற்பட்டது என்பது கவலைக்குரியது.
இருப்பினும் கட்சியின் தேசியப் பட்டியலில் அவர் பெயர் முதலாவதாக உள்வாங்கப்பட வேண்டும் என்ற பிரேரணையும் முன்வைக்கப்பட்டது.
அதையும் நாங்கள் சாதகமாக பரிசீலித்திருக்கிறோம் என்பதை இங்கு நான் குறிப்பிட்டாக வேண்டும்.
கட்சியின் வெற்றிக்காக அம்பாறை மாவட்டத்திலும் அதற்கப்பாலும் உறுதிப்படுத்துவதற்கு கட்சியின் பிரதி தலைவர்களில ஒருவரான ஹரிஸ் எங்களுடன் முழுமையாக ஒத்துழைக்கும்போது
நான் ஏற்கனவே குறிப்பிட்ட அவருக்கான தேசிய பட்டியல் விவகாரம் சாதகமாக பரிசீலிக்கப்படும் என்பதை இங்கே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என்ன அவர் தெரிவித்தார்.
இருந்த போதிலும் கிடைக்காத தேசிய பட்டியலுக்கு ஹரீஸை நியமிப்பதாக ஹக்கீம் ஏமாற்றுவதாகவும்,
மக்கள் செல்வாக்கு நிறைந்த ஹரீஸை தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற அனுப்பவேண்டிய தேவை என்ன என்பதையும்,
ஹக்கீம் அணியினர் அம்பாறையில் ஹரீஸின் வீச்சுக்கு நின்று பிடிக்க முடியாமல் போனதால் இவ்வாறான அறிக்கைகளை விடுவதாகவும்,
மு.கா தலைவர் ஹக்கீமுக்கும், செயலாளர் நிஸாம் காரியப்பருக்கும் எதிராக அம்பாறையில் எதிர்ப்பு கூடி வருகிறது குறிப்பிடத்தக்கது.








