இலங்கை செய்திகள்
Trending

இளம் வேட்பாளர் உயிரிழப்பு!

யாழ். போதனா வைத்தியசாலையில் சம்பவம்

தேர்தலில் போட்டியிட களமிறங்கியிருந்த இளம் வேட்பாளர் உயிரிழப்பு!

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் இளம் வேட்பாளர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

அங்கஜன் தலைமையிலான ஜனநாயக தேசியக் கூட்டணியில் தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடும், வல்வெட்டித்துறை நகரசபை முன்னாள் உறுப்பினரும் உடுப்பிட்டி பகுதியை சேர்ந்தவரான செந்திவேல் தமிழினியன் என்ற வேட்பாளரே உயிரிழந்துள்ளார்.

திடீர் சுகவீனம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த வேட்பாளரின் மறைவிற்கு நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

Back to top button