கலை, கலாசாரம்
விசேட தேவையுடைய நபருக்கு தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற அனுமதி வழங்கிய தேசிய மக்கள் சக்தி
விசேட தேவையுடைய நபருக்கு தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற அனுமதி வழங்கிய தேசிய மக்கள் சக்தி

தேசிய மக்கள் சக்தியானது விசேட தேவையுடைய ஒருவருக்கு தனது தேசிய பட்டியலில் வாய்ப்பளித்துள்ளது. இலங்கை பார்வையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் சுகத் வசந்த டி சில்வாவுக்கே இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இலங்கை பாராளுமன்றத்தில் முதல் தடவையாக உடல் ஊனமுற்ற ஒருவர் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் பார்வையற்றவர்களின் பிரதிநிதியாக பாராளுமன்றில் செயற்படவிருப்பதால் அவரது நியமனம் மிகவும் முக்கியத்துவமிக்கதாக கருதப்படுகின்றது. மேலும் அனைவருக்கும் சமத்துவம் என்ற கொள்கையில் இருக்கும் தேசிய மக்கள் சக்தியின் இந்த முயற்சி மிகவும் முற்போக்கானதாகவும் பார்க்கப்படுகின்றது.








