இலங்கை செய்திகள்

விசா இல்லாமல் இலங்கையில் தங்கிய 08 வெளிநாட்டு குடியாளர்கள் கைது!

விசா இல்லாமல் இலங்கையில் தங்கிய 08 வெளிநாட்டு குடியாளர்கள் கைது!

விசா இன்றி  சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருந்த 08 வெளிநாட்டு பிரஜைகள் நேற்று திங்கட்கிழமை (02) கைது செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் நுவரெலியா, ஹாவா எலிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசா இல்லாமல் இலங்கையில் தங்கிய 08 வெளிநாட்டு குடியாளர்கள் கைது!

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 28 மற்றும் 65 வயதுடைய இந்தோனேசிய பிரஜைகள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

Back to top button