கலை, கலாசாரம்
வாக்குச் சீட்டை புகைப்படம் எடுத்த முல்லைத்தீவு பாடசாலை அதிபர் கைது!

[ad_1]
முல்லைத்தீவு பகுதியில் உள்ள பாடசாலை அதிபர் ஒருவரை வாக்களித்த பின்னர் தபால் மூல வாக்குச் சீட்டை புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
முல்லைத்தீவு கல்வி அலுவலகத்தில் சான்றிதழ் அலுவலராக கடமையாற்றிய அதிபர், செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி முல்லைத்தீவு கல்வி அலுவலகத்தில் தபால் மூல வாக்களிப்பின் போது வாக்குச் சீட்டின் புகைப்படம் எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதிபர் வாக்குச் சீட்டை புகைப்படம் எடுப்பதை அவதானித்த தேர்தல் ஆணைய அதிகாரிகள், அவரது கைபேசியை சோதனையிட்டனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து முல்லைத்தீவு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதுடன், தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் அதிபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Lankafire








