கலை, கலாசாரம்

வவுனியாவில் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பெண்!

[ad_1]

வவுனியா, ஓமந்தையில் ரயில் மோதி பெண்ணொருவர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி இன்று (10-09-2024) மாலை சென்ற ரயில் புளியங்குளம் பகுதியை கடந்து ஓமந்தையை நோக்கி நகர்ந்த போது ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற பெண் மீது மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் சுமார் 35-45 வயது மதிக்கத்தக்கவர் எனவும், இதுவரை சடலம் அடையாளம் காணப்படவில்லை என ஒழந்தைத் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

[ad_2]
Lankafire

Back to top button