இலங்கை செய்திகள்
வவுனியாவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் மக்கள் சந்திப்பு

வவுனியா சூடுவெந்தபுலவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிசாட் பதியுதீனின் மக்கள் சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்றது.
இந்த மக்கள் சந்திப்பானது கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்தமைக்காக மக்களிற்கு நன்றி தெரிவிக்கும் முகமாகவும், நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிலைப்பாட்டை மக்களுக்கு தெளிவூட்டும் முகமாகவும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் தலைவருமான ரிசாட் பதியுதீன், கட்சியின் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் ஜெயதிலக்க, முன்னாள் நகர சபை உறுப்பினர்களான லரிப், பாரி மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.








