இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் ஹரிணி அமரசூரிய..! வாக்குறுதிகள் கொடுத்தாரா?

கிளிநொச்சியில் ஹரிணி அமரசூரிய..! வாக்குறுதிகள் கொடுத்தாரா?

கிளிநொச்சியில் தேசிய மக்கள் சக்தியின் மாபெரும் பிரச்சாரக் கூட்டம் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்றது.

இங்கு கருத்துரைத்த பிரதமர்,

கடந்த 21 ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்கள் பதவி ஏற்ற பின்னர் பல வருட காலமாக மூடப்பட்டிருந்த ஜனாதிபதி மாளிகையின் சுற்றுவட்ட வீதியை மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் யாழ்ப்பாணம் பலாலி வசாவிளான் வீதியும் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல வீதிகள் மக்கள் பயன்பாட்டுக்காக கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அது மட்டுமின்றி மக்களின் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டி உள்ளதாகவும் தெரிவித்தார் .

கிளிநொச்சியில், ஹரிணி, வாக்குறுதிகள், பிரதமர்

தற்பொழுது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் முன்னைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தாம் திசைகாட்டி சின்னத்துடன்இணைந்து பயணிக்க இருப்பதாகவும் எம்மை பாராளுமன்றம் அனுப்புவதற்கு மக்களே! உங்களது வாக்குகளை அளிக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.

ஆனாலும் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் 25 அமைச்சர்கள் பதவியை வகிப்பார்கள் எனவும் அவர்கள் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களாகவே இருப்பார்கள் எனவும் இதைவிட வேறு எவரையும் எமது கட்சியில் இணைத்துக் கொள்ளவோ அவர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்குவதற்கோ தயாராக இல்லை எனவும் பிரதமர் இன்றைய தினம் கிளிநொச்சியில் தெரிவித்தார்.

கிளிநொச்சியில், ஹரிணி, வாக்குறுதிகள், பிரதமர்

அது மட்டுமின்றி வட மாகாணத்திலும் சரி, இலங்கையில் எப்பாகத்திலும் சரி போதைப் பொருள் உற்பத்தி செய்யப்படுவதில்லை.மாறாக வெளிநாடுகளில் இருந்தே இதனைக் கொண்டு வந்து எமது பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் எதிர்காலத்தையே அழித்து வருகின்றனர்.

எனவே எமது அரசாங்கத்தில் இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Back to top button