வடக்கு கிழக்கு முன்னேற்றக் கழகம், மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சையாக களத்தில்
பெண்களுக்கு சரி சமமாக போட்டி இடும் சந்தர்ப்பம்

வடக்கு கிழக்கு முன்னேற்றக் கழகம், மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சையாக களத்தில்
மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச படையினரின் அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்து வந்த தமிழ் தேசிய அரசியலில் தீவிரமாக செயல்பட்ட சிவில் சமூக கூட்டமைப்பாக பலராலும் அறியப்பட்ட வி.லவகுமார் தலைமையிலான வடக்கு கிழக்கு முன்னேற்றக் கழகம், இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு சுயேட்சையாக களமிறங்க கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் வடக்கு கிழக்கு முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வி. லவகுமார் தலைமையில் குழுவினர் கட்டுப் பணம் செலுத்தி இருக்கும் நிலையில். இதுவரை கட்டுப் பணம் செலுத்திய கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களுடன் ஒப்பிடும் போது, குறித்த தரப்பினர் தங்கள் வேட்பாளர் நியமனத்தில் பெண்களுக்கு சரி சமமாக போட்டி இடும் சந்தர்ப்பம் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது,
அதேநேரம் குறித்த கட்டுப் பணத்தை செலுத்திய பின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த வடக்கு கிழக்கு முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வி.லவகுமார்
தமிழர் தாயகமான வடகிழக்கை பிரித்து தமிழர்களின் முதுகெலும்பை உடைத்தவர்கள் ஜே.வி.பி. கட்சியினர் என்பதை தமிழ் மக்கள் ஒருபோதும் மறந்து விடக்கூடாது அதேவேளை கிழக்கை மீட்கப் போகின்றோம். அபிவி ருத்தியைச் செய்யப்போகின்றோம் என்றவர்கள் இன்று புதிய அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியதும் ஒளித்துத் திரிகின்றனர். எனவே தமிழினத்துக்காக வும் தமிழ் பிள்ளைகளின் எதிர்கால கல்விக்காகவும் மாற்றத்தை நோக்கிய பயணத்துக்கு இந்த தேர்தலில் போட்டியிடுகின்றோம் என வடக்கு கிழக்கு முன் னேற்றக்கழத்தின் தலைவரும் சமூக செயற்பாட்டாளருமான வி.லவக்குமார் தெரிவித்தார்.
கடந்த கால அரசியல் பயணங்களை பார்க்கின்றபோது பல விதமானவர்கள். பல விதமான அரசியல் கோணங்களிலே பயணித்தனர். அதில் ஒன்று இன்று ஜனாதிபதி பதவியைப் பெற்ற தே.ம.ச. கட்சி, இன்று அதற்குப் பெரிய அளவில் தே.ம.ச. கட்சி பெரியளவில் வென்றிருக்கலாம். இளைஞர், யுவதிகள் இன்று மிகவும் உற்சாகமாக அவர்க ளைப் பின் தொடரலாம். தமிழர்கள் ஒற்றுமையாக இருக்க கூடாது என்ப தற்காக நீதிமன்றில் வழக்கைத் தொடுத்து, வடக்கையும் கிழக்கையும் இரண்டாக பிரித்து, தமிழ் மக்களின் ஒற்றுமையை சிதைத்தவர்கள் இவர்களே என்பது யாரும் மறுக்கமுடி யாது உண்மையாகும்.
இன்று நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சையாக கால்பதிப்பதற்காக
காரணம் கடந்தகால அரசியல் வரலாறு, அதைப் பார்கின்றபோது பல பாடசாலைகளுக்கு கல்வி தேவைகள் இருந்தன. அந்தத் தேவைகளைப் பூர்த்திசெய்ய வேண்டிய அரசியல்வாதி களே பாடசாலைகளை இழுத்து மூடிய வரலாறு இருக்கின்றது.
ஓமடியாமடு கிராமத்துக்கு ரன்சர தென்ன என பெயரை மாற்றி, அந்தக் கிராமத்தில் இருந்து வேலமுகன் வித்தியாலயத்தை பூட்டி, அந்த பாடசாலையை முற்றுமாக நடாத்த முடியாமல் தடுத் தார்கள். நாங்கள் எந்தவொரு அரசியல் பலமும் இல்லாமல் அந்தப் பாடசாலை யைத் திறக்வேண்டும் என்ற ஒரே முயற்சியோடு போராடி அதனை மீண்டும் திறந்து இன்றும் அந்த பாடசாலை நடைபெறுகின்றது.

எங்களுக்கு நடந்த அநீதிகளுக்கு சர்வதேசத்தை நோக்கி குரல் எழுப்பி, பலவிதமான தடைகள் மற்றும் எதிர்ப்பு களுக்கு மத்தியிலே இலங்கை அரசை யும் எதிர்த்து நாங்கள் போராடி எமது மக்களின் நீதிக்கான பயணத்தை நடத்தவேண்டிய காலம் இருந்தது. தரவை மாவீர் துயிலும் இல்லத்தில்
ஆயிரக்கணக்கான மாவீரர்களை வித்தாக விதைத்துள்ளனர். அதில் விதைக்கப்பட்டவர்களின் கல்லறை சிங்களப் பேரினவாத இராணுவத்தின ரால் அழிக்கப்பட்டன. அங்கு மரக்கன் றுகளை நாட்டினர். அங்கு விதைகுழிக ளில் விதைக்கப்பட்டோருக்கு மக்கள் அஞ்சலிசெய்யமுடியாது சிங்கள பேரி னவாதிகளும் சில மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசியல்வாதிகளும் தடைகளை உருவாக்கினார்கள். ஆனால், நாங்கள் மக்களின் பலத்துடன் அவர்களை அங்கிருந்து துரத்தி மீண்டும் மக்கள் சென்று மாவீரர்களை நினைவு கூரத்தக்கதான ஏற்பாடுகளை செய்து கொடுத்திருந்தோம்.
இவ்வாறு வீட்டுத்திட்டம், குடிதண்ணீர் வசதி போன்ற பல சமூகம் சார்ந்த காரியங்கள் செய்து கொடுத்தமை மட்டு மல்லாது பல போராட்டகளை செய்தோம். சத்துருக் கொண்டான் படுகொலை
நினைவு தூபியில் படுகொலை செய் யப்பட்டவர்களின் பெயர்களை பொறிக்கும் போது பலவிதமான தடைகளுக்கு முகம் கொடுத்தோம்.
இன்று கிழக்கை மீட்கப் போகின் றோம். அபிவிருத்தியை செய்யப் போகின்றோம் என மார்பு தட்டிக் கொண்டு சில அரசியல்வாதிகள் கிழக்கை சுற்றி வந்தார்கள். இந்த புதிய அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியதும் எந்தவொரு நபரையும் காணமுடியாத ஒரு சூழல் கிழக்கிலே ஏற்பட்டுள்ளது. லஞ்சம். நீதியற்ற வாழ்வு, மக்களுக்கான சரியான செயல்களை செய்யாத படியி னால் இன்று ஒளித்துத் திரிகின்றனர். எனவே உங்கள் இடத்துக்கு நாங்கள் வருவது எங்களுக்காக அல்ல. வருவது உங்களுக்காக.
தேசியத் தலைவரால் ஒரே குடையின் கீழ் உருவாக்கப்பட்ட கட்சி இன்று சிதைந்து நிற்கின்றது. வடகிழக்கில் ஆயிரம் விகாரைகளை கட்டுவேன் என்ற சஜித் பிரேமதாஸவுக்கு தமிழ் தேசியத்தில் இருக்கின்ற சில நாடாளு மன்ற உறுப்பினர்கள் அவருக்கு முட்டுகொடுத்து அவர் வெற்றி பெற்றால் எங்களுடைய மாவட்டத்தில் விகாரை களை கட்டுவதற்கு அனுசரணையாகச் செயற்பட இருந்தனர்.
எனவே மட்டக்களப்பு மக்களின் இருப்பைக் காப்பாற்ற வேண்டிய சூழ் நிலையும் எங்கள் தமிழினத்துக்காகவும் தமிழ் பிள்ளைகளின் கல்விக்காகவும் மாற்றத்தை நோக்கிய பயணத்துக்கு இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றோம். என்றார்.








