வசாவிளான் மீள் திறப்பு என் முயற்சியே ..! அடித்துக்கூறும் டக்ளஸ்…
வசாவிளான் மீள் திறப்பு என் முயற்சியே ..! அடித்துக்கூறும் டக்ளஸ்...

வசாவிளான் -தோலகட்டி சந்தி வரையான பாதையின் மீள்திறப்புக்கு என் தலையீடு இன்றியமையாதது என முன்னாள் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கிளிநொச்சி பெரியகுளம் கட்டைக்காடு பகுதியில் நடைபெற்றது.
இதில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறினார்.
வசாவிளான் பாதையினை திறப்பதற்கு நீண்ட காலமாக முயற்சிகள் தம்மால் மேற்கொள்ளப்பட்டு வந்ததாகவும் அப்பாதையினை திறப்பதற்கு பல்வேறு வகையிலும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்ததாகவும் கூறினார்.

அத்துடன் தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களிடமும் வீதிகள்,பல்வேறு அபிவிருத்திகள் தொடர்பாகவும் விரிவாக எடுத்து கூறியுள்ளோம் என்றார்.
இதனை அடுத்து தற்பொழுது வசான்களால் பாதை மக்கள் பாவணைக்கு கையளிக்கப்பட்டதை நினைத்து தான் மகிழ்ச்சி அடைவதாகவும் அத்தோடு ஜனாதிபதிக்கும் வாழ்த்துக்கள் தெரிவிப்பதாகவும் கருத்து வெளியிட்டார்.







