ராஜபக்ச உகண்டாவில் மறைத்துவைத்துள்ள 18 மில்லியன் டாலர்கள் : விசாரிக்க முடியுமா அனுர.?
ராஜபக்ச உகண்டாவில் மறைத்துவைத்துள்ள 18 மில்லியன் டாலர்கள் : விசாரிக்க முடியுமா அனுர.?

ராஜபக்ச உகண்டாவில் மறைத்துவைத்துள்ள 18 மில்லியன் டாலர்கள் : விசாரிக்க முடியுமா அனுர.? ராஜபக்ச 18 பில்லியன் திருடப்பட்ட டொலர்களை உகண்டாவிற்கு அனுப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை விசாரணை செய்து அதற்கான பணத்தை கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு தற்போதைய அரசாங்கத்திடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கேட்டுக் கொண்டுள்ளது.
எதிர்க்கட்சியில் இருந்து குற்றச்சாட்டை முன்வைத்த குழுவே இன்று ஆட்சியில் இருப்பதாகவும், சட்டத்தை ஆராய்ந்து அமுல்படுத்துவதற்கு எந்த தடையும் இல்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

மேலும் ஊடக நிகழ்ச்சிகளை நடத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும் திருடப்பட்டிருந்தால் அது குறித்து விசாரணை நடத்தி சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொள்கிறார்.
மேலும், அனைத்து சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்களும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கீழ் உள்ளதால், இனி ஊடக நிகழ்ச்சிகளில் எந்த அர்த்தமும் இல்லை என்றும், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து சட்டத்தை அமுல்படுத்துமாறும் லங்கா பொதுஜன பெரமுன ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.








