கலை, கலாசாரம்

ரஷ்யாவில் 22 பேருடன் பயணித்த ஹெலிகொப்டர் மாயம்!

[ad_1]

ரஷ்யாவில் 22 பேருடன் பயணித்த  ரஷியாவில் எம்ஐ-8டி ரக ஹெலிகொப்டர் ஒன்று காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹெலிகொப்டர் வாக்கசெட்ஸ் எரிமலைக்கு அருகிலுள்ள தளத்திற்கு புறப்பட்ட சில மணி நேரங்களில் திட்டமிடப்பட்ட நேரத்தில் விமானியிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை.

3 பணியாளர்கள் மற்றும் 19 பயணிகள் என மொத்தம் 22 பேருடன் சென்ற ரஷ்ய ஹெலிகொப்டர் நாட்டின் கிழக்கு கம்சட்கா தீபகற்பத்தில் காணாமல் போனதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைப்பின் முதற்கட்டத் தகவல் வெளியானது.

1960 ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட இரண்டு இயந்திரங்கள் கொண்ட ஹெலிகொப்டரான எம்ஐ-8 ரஷியாவிலும், அண்டை நாடுகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

முன்னதாக ஆகஸ்ட் 12 ஆம் திகதி, 16 பேருடன் பயணித்த எம்ஐ-8 ஹெலிகொப்டர் ரஷியாவின் தூர கிழக்குப் பகுதியான கம்சட்காவில் அதிகாலையில் விபத்துக்குள்ளானது.

கம்சட்கா தீபகற்பம் அதன் இயல்புக்காக சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமானது.

இது மொஸ்கோவிற்கு கிழக்கே 6,000 கி.மீ (3,728 மைல்கள்) மற்றும் அலாஸ்காவிற்கு மேற்கே சுமார் 2,000 கி.மீ தொலைவில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

[ad_2]
Lankafire

Back to top button