கலை, கலாசாரம்

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்க தமது கட்சி தீர்மானிக்கும் பட்சத்தில் அதற்கு நான் ஆதரவு வழங்குவேன் : மஹிந்த !

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்க தமது கட்சி தீர்மானிக்கும் பட்சத்தில் அதற்கு நான் ஆதரவு வழங்குவேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேலும் மேற்குறித்த கருத்தானது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர் ஒருவர் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்வுக்கு இன்னும் ஆதரவு இருக்கின்றதா? என கேள்வியை எழுப்பினார்.

அதற்கு கட்சியே தீர்மானிக்க வேண்டும். நான் இல்லை. தீர்மானத்தை மாற்ற வேண்டும் என கட்சி கூறினால், அதனையும் செய்வேன் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

, ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்க தமது கட்சி தீர்மானிக்கும் பட்சத்தில் அதற்கு நான் ஆதரவு வழங்குவேன் : மஹிந்த !

Back to top button