கலை, கலாசாரம்

ரஜினி, தி.மு.க.வில் புயலையும் சுனாமியையும் கிளப்பியுள்ளார்

[ad_1]

நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு சென்னை கோபாலபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ வேணு கோபால சுவாமி கோவிலில் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது

திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியில் இருந்து இறங்க வேண்டும் என்பதே எங்களது ஒற்றை குறிக்கோள். செப்டம்பர் 25 வரை எங்களது முழு கவனம் உறுப்பினர் சேர்க்கை.

தி.மு.க.வின் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் திமுக ஆலமரம் போன்றது எனக் கூறியிருந்தார். அப்படி தான் தெலுங்கானாவிலும் ஆந்திராவிலும் ஆலமரம் என்றார்கள். அங்கு ஆட்சி மாறி இருக்கிறது. ரஜினிகாந்த் தி.மு.க.வில் புயலையும் சுனாமியையும் உருவாக்கி இருக்கிறார்.

கட்சிக்கு கடுமையாக உழைத்த துரைமுருகன் இன்றும் ஸ்டாலினுக்கு கீழ் இருக்கிறார். அடுத்ததாக உதயநிதிக்கு கீழும் இருக்க வேண்டியுள்ளது. இதனால தான் வாரிசு அரசியலை நாங்கள் வேண்டாம் என்கிறோம். உதயநிதி ஸ்டாலின் துரைமுருகனின் பேச்சை மட்டும் சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என சொல்லி இருக்கிறார். அப்போ ரஜினி காந்தின் பேச்சை சீரியசாக எடுத்துக் கொள்ளலாமா?

சீனியர்கள் பலரிடம் இருந்த பொறுப்புகள் தற்போது மற்றவர்களுக்கு மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது. தி.மு.க. தொண்டர்கள் இதனை சிந்திக்க வேண்டும். பா.ஜ.க.வின் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. மூத்தவர்களுக்கு பா.ஜ.க.வில் அதிகம் மரியாதை கிடைக்கும். அதனால் உறுப்பினராக பா.ஜ.க.வில் சேர்ந்து கொள்ளுங்கள்.

கலைஞரின் வீட்டிற்கு முன் நின்று அவர்களையே விமர்சனம் செய்யும் அளவிற்கு பாரதத்தில் ஜனநாயகம் இருக்கிறது என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

[ad_2]
Lankafire

Back to top button