இலங்கைக்குள் நுழையும் புதிய வைரஸ்..! வெகுவிரைவில் ஆபத்து?
இலங்கைக்குள் நுழையும் புதிய வைரஸ்..! வெகுவிரைவில் ஆபத்து?

இலங்கைக்குள் புதிய வைரஸ் பரவக்கூடிய சத்தியம் உள்ளதாக அறியமுடிகிறது.
சீனாவில் அண்மைய நாளாக பரவிவரும் எச்.எம்.பி.வி வைரஸ் தொற்று, இந்தியாவில் பெங்களூருவில், 3 மாத பெண் குழந்தை மற்றும் 8 மாத ஆண் குழந்தைக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சளி போன்ற அறிகுறிகளே இதனால் இருக்கும். வயதானவர்கள், குழந்தைகளுக்கு கூடுதல் பாதிப்பு ஏற்படலாம். ஆனால் கவலையடையும் அளவுக்கு இது தீவிரமான விஷயமில்லை என நிபுணர்கள் கூறியுள்ளனர்.

அதேவேளை எந்தவிதமான வெளிநாட்டு பயண வரலாறும் இல்லாத சூழ்நிலையிலும் குழந்தைகளுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை HMPV வைரஸ் என்பது human metapneumovirus என்பதை சுருக்கம். கொரோனா போலவே மூச்சுக்குழாயை பாதிக்கும் ஒரு வகையான வைரஸ் இது.
தற்போது சீனாவின் வடக்கு பகுதிகளில் அதிகம் பரவி வருகிறது. குறிப்பாக, 14 வயதுக்கு கீழ் உள்ளவர்களை இந்த வைரஸ் அதிகமாக தாக்குகிறது. அதே நேரத்தில் இது பருவ காலங்களில் வரும் சாதாரண தொற்று போன்றதுதான் என்கின்றனர் மருத்துவர்கள்.
கொரோனா போல அச்சப்பட தேவையில்லை என சீன மருத்துவ ஆய்வாளர்களும் கூறியுள்ளனர். அதேவேளை இந்தியாவில் முதல் முதலில் பெங்களூருவை சேர்ந்த இரு குழந்தைகள் HMPV வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயம் இந்தியாவில் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள HMPV இலங்கைக்கும் பரவுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.








