இலங்கை செய்திகள்
காட்டு யானையின் தாக்குதல்..! ஒருவர் பலி…
காட்டு யானையின் தாக்குதல்..! ஒருவர் பலி...

காட்டு யானையின் தாக்குதலில் நாவுல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகஸ் பொபெல்ல பகுதியில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை (07) இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் போகஸ் பொபெல்ல பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடையவர் ஆவார்.
இவர் அப்பகுதியில் உள்ள உறவினர் வீட்டிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.








