யாழில் தொடர் காய்ச்சலால் பரிதாபமாக உயிரிழந்த 7 பிள்ளைகளின் தாய்!

[ad_1]
யாழ்ப்பாணத்தில் 20 நாட்களாக தொடர் காய்ச்சல் காரணமாக குடும்பப் பெண் ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
நாரந்தனை மத்தி, ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த அன்னலட்சுமி நடராசா என்ற 7 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
இவர் கிளிநொச்சியில் மகள் வீட்டில் இருந்தவேளை கடந்த 7ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டதால் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
எனினும் காய்ச்சல் குணமடையததால் 17ஆம் திகதி ஊர்காவற்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
அதன்பின்னரும் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் 19 ஆம் திகதி ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து, 27ஆம் திகதி மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
[ad_2]Lankafire








