கலை, கலாசாரம்

யானை சின்னம் நிச்சயம் வெல்லும்..!வேட்பாளர்கள் உறுதி…

யானை சின்னம் நிச்சயம் வெல்லும்..!வேட்பாளர்கள் உறுதி...

யானை சின்னத்துக்கு இம்முறை இடம்பெறவுள்ள பொது தேர்தலில் அமோக வெற்றியென ஐ.தே.க வின் யாழ் வேட்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய தேசியக்கட்சி சார்பாக யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஊடக சந்திப்பு கிளிநொச்சியில் நடைபெற்றது. குறித்த ஊடக சந்திப்பில் வேட்பாளர்களான நவரத்தினராஜ் டேவிட், மரியதாஸ் மரியசீலன், உதயா யோன் றூஸ்வெல்ற் ,கந்தையா குகானந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

யானை, சின்னம், நிச்சயம், வெல்லும்

மரியதாஸ் மரியசீலன் கருத்து

யானை சின்னத்தில் போட்டியிட்டு அதிகமானோர் பாராளுமன்றம் செல்வோம். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கிலும் , ஏனைய மாகாணங்களிலும் நிறைய அபிவிருத்தியை செய்தார்.நாடு மூழ்கிய நிலையில் நாட்டை மீட்டார். இறுதி காலத்தில் கூட கிளிநொச்சியில் நிறைய காணிகளை விடுவித்தார்.இவ்வாறு பல அபிவிருத்தியை செய்திருக்கிறார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளராக இருந்து ஏன் ஐக்கிய தேசிய கட்சிக்கு சென்றதாக ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, ஐக்கிய தேசியக்கட்சி மாறி ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தேன் இருமுறை தோற்ற ஒருவரை வேறு கட்சியிலிருந்து ஐக்கிய மக்கள் சக்திக்கு கொண்டு வந்ததன் காரணமாக  எங்களுடைய கெளரவம் வீணாகிவிட்டது. எங்களுடன் இணைந்த பலர் விலகினர்.முருகேசு சந்திரகுமாரின் ஆளுமை குறைபாடு அசமந்த போக்கு காரணமாக மக்களின் வாக்கு குறைந்து செல்கிறது என்றார்.

நவரத்தினராஜ் டேவிட் கருத்து

இன்று பல கட்சிகள், சுயேட்சைக்குழுக்கள் போட்டியிடுகின்றன. அவற்றுக்கு ஒரு கோரிக்கை இல்லை மக்களின் வாக்குகளை சீரழிக்கும் முயற்சி இதனை JVP தான் செய்கிறது .

ரணில் விக்கிரமசிங்க உருவாக்கிய பொருளாதாரத்தை சீரழித்துள்ளனர்.குறிப்பிட்ட காலத்தில் நாடு திரும்பவும் ஒரு வங்குரோத்து நிலைக்கு செல்லவுள்ளது.

எனக்கு அரசியலுக்கு வரும் முழு தகைமையும் உள்ளது. நான் சோமசுந்தரப்புலவரின் பூட்டப்பிள்ளை.

கடற்றொழில் ,விவசாயம்,கல்வி, சுற்றுலா துறைகள் முன்னேற்றப்படவேண்டும்.பொய்க்கு தேசியம் கூறுபவர்களையும் சுயேட்சைக்குழுக்களையும் நம்பி வாக்களிக்காதீர்கள் என்றார்.

உதயா யோன் றூஸ்வெல்ற் கருத்து

கிளிநொச்சி மண்ணிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவின் கட்சியில் இடம் தந்தமைக்கு நன்றி. மக்களிடம் செல்லும்போது சிங்கள கட்சியுடன் சேர்ந்து கேட்பதாக சொல்கின்றனர்.

பொருளாதாரத்தை மேம்படுத்த கூடிய ஆளுமை தான் எமது கட்சியின் தலைமை என்றார்.

கந்தையா குகானந்தன் கருத்து

இன்று பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தேர்தலில் களம் இறங்கியுள்ளனர்.தமிழ்த்தேசியம் பேசுபவர்களிடம் கேட்கிறேன் இவ்வளவு காலமும் பாராளுமன்றம் சென்று மக்களுக்கு செய்தது என்ன.சுயலாபத்திற்காகவே களம்இறங்கியுள்ளனர்.

தேசியம் பேசும் ஒருவேட்பாளர் சொல்கிறார் சிங்கக்கொடி இருக்கிற இடத்திற்கு செல்ல மாட்டேன் என்று பாராளுமன்றில் சிங்கக்கொடி தான் உள்ளது.

மாவீரர்களை நினைவு கூறும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியவர் ரணில் என்றார்.

 

Back to top button